சுவாமிகளின் இயற்பெயர் மனோகரன். திரு வைத்தியனாத கனபாடிகளுக்கும் திருமதி அலமேலு அம்மாளுக்கும் மகனாக 1956ல் பேரூரில் பிறந்தார். விவேகானந்தரிடம் அளவற்ற பக்தி கொண்டவர். வேதம் கற்றவர். 1979ல் வீட்டைத் துறந்து, காரமடையில் ஒரு குன்றில் 21 நாள் தவம் இருந்தார். திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தரிடம் தீட்சை பெற்றார்.
சுவாமி ஓம்காரானந்தர் தேனியில் வேதபுரி ஆசிரமம் அமைத்து இறைத்தொண்டு ஆற்றி வந்த மஹான். திருக்குறளும் கீதையும் என்ற தலைப்பில் அவா் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் சிறப்பானவை. புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆசிரம பீடாதிபதியாக இருந்தார். தா்ம ரக்ஷண சமிதியின் தமிழகத் தலைவராக இருந்து ஹிந்து சமுதாயப் பணிகளைச் செய்த தொண்டர். ஹிந்து விரோதப் போக்கினைத் துணிவுடன் எதிா்கொண்டவர்.
சாத்திர சம்பிரதாயங்களின் பின்னே இருக்கும் தத்துவங்களை எளிதில் விளக்கி, அவற்றைப் பின்பற்ற மக்களுக்கு வழி அமைத்துக் கொடுத்ததில் இவருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. வடமொழி, தமிழ் இந்த இரண்டு மொழிகளிலும் உள்ள பக்திப் பாடல்களை எல்லாரும் பாராயணம் செய்யவேண்டும் என்ற உறுதியான கொள்கையுடன் வாழ்ந்தவர். பசு வதை தடுப்பு, பசு பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தியவர்.
10-May-2021 திங்கட் கிழமை, சுவாமிகள் மதுரையில் மஹா ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 64.
சுவாமிகளின் சொற்பொழிவுத் தொகுப்பு இதோ.
சிவசிவ.