எங்களைப் பற்றி..About Us

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

நாள்தோறும் தமிழ்மறை.
வீதிதோறும்  தமிழ்மறை.
வீடுதோறும்  தமிழ்மறை.

என்ன செய்கிறோம்? What we do

தமிழும், பக்தியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டின் முன்பும் கமழ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தமிழ், பக்தி, தர்மம் பற்றிய தளங்கள் குறைவாகவே உள்ளன. அவற்றிலும் அனேகமாக எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. முக்கியமான, ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான இறையுணர்வு விஷயங்களை, ஒரே தளத்தில் திருவருள் அளிக்கிறது.


ஃபேஸ் புக், இன்ஸ்டாக்ராம் போன்றவற்றில் வரும் இடுகைகள் மக்களை எட்டினாலும், அதை வாசிக்கும் போதே நமது கவனத்தைக் கலைக்கிற விஷயங்களும் அவற்றில் உள்ளன. அப்படி இல்லாமல், திருவருள் பற்றிய ஒரே சிந்தனையோடு, தமிழ்-பக்தி-தர்மம் பற்றிய விஷயங்களைத் திருவருள் அளிக்கிறது.

குருவருளும் திருவருளும் எங்கும் பரவட்டும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - வள்ளுவர்

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தமிழ்மறை ஓதும் அன்பரை நியமித்து, தினம் தினம் இந்துக்களின் வீட்டின் முன், தமிழ்மறைப் பாடல்களை ஓதுவதே எங்களின் எண்ணம்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும், பிற அடியார்களும், தமிழிலே பக்திப் பாடல்களை நமக்கு அளித்துள்ளனர். அந்தப் பாடல்களைக் காதால் கேட்டாலே அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

தாய்மொழி வாயிலாக இறைவனைத் துதிப்போம்.

ஓதுவது ஒழியேல் - ஔவையார்.

ஒவ்வொரு தமிழ்க்குழந்தையும், குறைந்த பட்சம்   100 இறையுணர்வு மிக்க  தமிழ்ப் பாடல்களை அறிந்திருக்க வேண்டும்.

அனைவரும் இந்த பக்தி இயக்கத்தில் கலந்து கொள்க.
திருவருள் பெறுக.