சேதியர் என்பவர்கள் ஒருவகை மரபினர் சேதியர் ஆண்ட நாடு சேதி நாடு எனப்படுகிறது.
இது தென்னார்க்காடு மாவட்டத்தின் வட மேற்கில் உள்ள நடுநாட்டில் இருக்கின்ற சிறிய பகுதி. தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் நடுவே உள்ள பகுதி, நடுநாடு ஆகும். சேதி நாடு மலையமான் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. சேதிநாட்டின் தலைநகரம் திருக் கோவலூர், கிளியூர் ஆகியவை. கிளியூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவரே சேதிராயர்.
திருவிசைப்பா அருளிய ஆசிரியர்களில் ஒருவர் சேதிராயர். இவர் சேதிநாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னர். மலையகுலராசன் என்ற பட்டத்தை உடையவர். இவர் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 -1120) சம காலத்தவராக அல்லது சற்றே பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் திருவிசைப்பாவில் ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பதிகம் சிதம்பரம் கோயில்மேல் பாடப்பட்டது.
சுந்தரமூர்த்தி சுவாமிகளை அவருடைய தந்தையிடம் இருந்து பெற்று அபிமானப் புதல்வராக நரசிங்கமுனையரையர் என்பவர் வளர்த்தார். அவரது வழியில் வந்தவர் சேதிராயர் என்று கூறுவார்கள்.
சேதிராயர் சிவபக்தி, அடியார்களுக்குப் பணிவிடை செய்தல், சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபடுதலில் ஈடுபட்டு முக்தி பெற்றார்.
திருச்சிற்றம்பலம்.