திருவருள் இயக்க அடியார்கள் எளிதாக வாசித்துப் பாராயணம் செய்யும் விதமாகத், திருப்பாடல்கள் தொகுப்பு அச்சிடப்பட்டு உள்ளது. 80 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், வினாயகர், சிவன், தேவி - அம்பாள், முருகன், மஹா விஷ்ணு, சூரியன் ஆகிய அறுசமய முழுமுதல் தெய்வங்கள் மேல் உள்ள பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வாசிப்பதற்கு எளிமையாகப் பதம் பிரித்து, நிறுத்தல் குறிகளோடு பாடல்கள் தரப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் மஹான்கள் அருளிய 320 பாடல்கள் உள்ளன.
பன்னிரு திருமுறை ( நாயன்மார்கள் அருளிய பாடல்கள்)
நாலாயிர திவ்ய ப்ரபந்தம் (ஆழ்வார்கள் அருளியவை)
திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் (அருணகிரி நாதர் அருளியது)
அருட்பிரகாச வள்ளலார் அருளியவை
தாயுமானவர் அருளியவை
தவத்திரு பாம்பன் சுவாமிகள் பாடல்கள்
தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடல்கள்
குமர குருபர சுவாமிகள் பாடல்கள்
போற்றி என முடியும் அர்ச்சனைப் பாடல்கள், துதிப் பாடல்கள், நோய் தீர்க்கும் பாடல்கள் போன்றவை இதில் அமைந்துள்ளதால், தினப்படி ஓதுவதற்கு இவை மிகவும் உகந்ததாக உள்ளன.