விஷ்ணுபுரம் கிராமம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்காவில் உள்ளது. இவ்வூரில் ஏறத்தாழ 500 குடும்பங்கள் உள்ளன. ஊரின் வடக்கில் அரசலாறு ஓடுகிறது. ஊரின் கிழக்கில் தருமகுளம் என்ற பெரியகுளம் உள்ளது. வயல் பாசனத்துக்கு விஷ்ணுபுரம் வாய்க்கால் பாய்கிறது.
ஊரில் உள்ள கோவில்கள்:
1. அருள்மிகு அம்ருதேஸ்வரி அம்பாள் - அருள்மிகு கைலாஸ நாதர் கோவில்
2. அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி - அருள்மிகு அபீஷ்ட வரதராஜப் பெருமாள் கோவில்
3. அருள்மிகு தரும பிள்ளையார் கோவில், அருள்மிகு தருமாம்பாள் - அருள்மிகு தருமபுரீஸ்வரர் கோவில்
4. அருள்மிகு மகமாயி கோவில்
5. அருள்மிகு அய்யனார் கோவில்
6. அருள்மிகு பிடாரி அம்மன் கோவில்
7. அருள்மிகு காளியம்மன் கோவில்
8. அருள்மிகு ஷீர்டி சாய்பாபா கோவில்
ஊரில் ஜார்ஜ் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி 100ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியும் அதற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
ஊரில் வள்ளித்திருமணம் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. வள்ளி விக்ரஹத்தைப் பக்தர்கள் சுமந்து ஓடும் போது, யானை ஒன்று துரத்தி முருகனுடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி இன்றுவரை சிறப்பாக நடத்தப் படுகிறது. மார்கழி மாத பஜனை, ராதா கல்யாணம், திருமுறை ஓதல் முதலியவை தொடர்ந்து நடைபெறுகின்றன.
பணி ஓய்வு பெற்ற பலரும் இவ்வூரில் மீண்டும் வந்து வசிப்பது ஒரு நல்ல விஷயம்.
ஊருக்கு அருகில் உள்ள ஒரு தோப்பில் 100 மாடுகளைக் கொண்ட கோசாலை அமைந்துள்ளது. இயற்கை உரத்தை இங்கிருந்து பலரும் வாங்கிச் செல்கின்றனர்.
PIN Code: 609501
STD Code: 04366