கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள், மணல்மேடு வழியாகச் சீர்காழி செல்லும் வழித்தடத்தில் பந்தநல்லூர் அருகில் மரத்துறை கிராமம் இருக்கிறது.

ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டாலும், சாம வேதமே பல யுகங்களாக வழிபடுகின்ற ஸ்தலம். ஆதலால் இந்த ஊர் வேதபுரி/மறைத்துறை என அழைக்கப்பட்டு பின்னர் மருவி ஸ்தல பெயர் மரத்துறை என்று  இப்போது அழைக்கப்படுகிறது.

இரட்டைப் பிள்ளையார் கோவில்:

ஸ்தல விநாயகர் நின்ற கோலத்தில் விசேஷமாக அருள்பாலிப்பதால், ஊரின் பெரியகுளம் அருகில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் மிகவும் விசேஷமாகப் போற்றப்படுகிறது. 2008-ல் ஆவணித் திங்களில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவன் கோயில்:

கொள்ளிடம் என்ற ஜீவநதிக்கும் மண்ணியாறுக்கும் இடையே ஊர் அமைந்துள்ளது. இங்கு தான் சர்வ லோகநாத சுவாமி ஆலயம் உள்ளது. இறைவி மங்களாம்பிகை ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரம் இல்லாத இக்கோயிலுக்கும் கிழக்கு மேற்கு என இருதிசைகளிலும் வாசல்கள் உள்ளன. எப்பொழுதும் மேற்கு வாயிலையே, கிராம வாசிகள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

சுமார் நூறு (100) ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஆலயம், 1942-ல் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீபீடாதிபதி  ஸ்ரீசங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன், கிராம வாசிகள் ஒத்துழைப்புடனும் 2008-ல் ஆவணித் திங்களில் கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடைபெற்றது.

ஸ்ரீலக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோவில்:

மரத்துறை  கிராமத்தின் நடுநாயகமாக விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மிநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஸ்ரீலக்ஷ்மியைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு விளங்குகிறார். ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்,  ஸ்ரீ விநாயாகர், ஸ்ரீ ஆஞ்சனேயர் பரிவாரங்களுடன்  ஸ்ரீ பூமிதேவி ஸமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் ருக்மணி சத்யா பாமா உடனுறை ஆலயம் 1932-க்கு பிறகு 2001-ல் மஹா     சம்போரக்ஷனம் நடைபெற்றது.

ஸ்ரீஹரி ஹரபுத்திரர் ( ஸ்ரீ பால ஸாஸ்தா ) சுவாமி ஆலயம்

ஸ்ரீஹரி ஹர புத்ரர் சுவாமி ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள மக்கள் (பெரும்பாலோர்) அனைவரும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

பொதுவாக தேவ கோட்டத்தின் தென் திசையில் அருள்பாளிக்கும் துர்க்கை இங்கு கோவிலின் நுழைவாயிலிலேயே வடதிசை நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அழகே அழகு. ஆலயத்தின் உள்ளே நுழைந்து நீண்ட நடைபாதையைக் கடக்கும் போது இடது புறம் சுதையினால் ஆன காவலன் அருகே இருக்கும் குதிரை சிலையைப் பார்க்கலாம். பிராகரத்தின் வடக்குத் திசையில் வீரனின் சுதை உருவம் இருக்கிறது.

மகா மண்டபத்தைக் கடந்து பலிபீடம் கண்டு அர்த்த மண்டபம் சென்றால், நுழைவாயில் இடது புறம் பிள்ளையாரும் வலது புறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர் கருவறையில் ஹரிஹர புத்திரர் சுவாமி அமர்ந்த நிலையல் காட்சியளிக்கிறார். இங்கு இறைவனுக்குச் சன்னியாசி அப்பன் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

1999-ல் கிராமவாசிகள் அனைவரும் சேர்ந்து கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அதன் பிறகு 2017-ல் அன்று மிக விமர்சையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ காத்யாயனி அம்மன்

கருவறையில் காத்யாயனி அம்மன் இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டு, வலது கையில் கிளியும், இடது கையில் தாமரை மலரும் தாங்கி ஐந்து தலைநாகம் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். மற்ற முனிகளை விட உயரமாக உள்ளார் வாள்முனி. இவரை வாழ்முனி என்றும் கூறுவர். செம்முனி முத்துமுனி, இலாடமுனி, பாலக்காட்டு முனி, சன்யாசிமுனி ஆகியோர் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளனர். ஜடா முனி இரு கால்களையும் குத்துக் கால்களாகக் கொண்டு அமர்ந்து உள்ளார். இலாடமுனி சிலை வடிவில் உள்ளார். பிற முனிகள் சுதை வடிவில் உள்ளனர். கஞ்சமலை ஈஸ்வரர் தனிக்கோயிலில் உள்ளார். இவருக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன.. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கற்கோயிலாகக் கட்டினர். பின்னர் ராஜகோபுரமும் வசந்த மண்டபமும் கட்டப்பட்டது.

1964, 1992, 2004 ஆம் ஆண்டில் ஸ்ரீ காத்யாயனி அம்மன் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 2015-ல் வசந்த மண்டபம் கட்டி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2017ல் வசந்த மண்டத்தில் தென்பக்கம், பிள்ளையாரும்  வடபக்கம் வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறுமண்டபம் கட்டி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ பிடாரியம்மன் (ஸ்ரீசெல்லியம்மன்) கோயில்

சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் ஊரின் பிடாரி குளத்தங்கரையில் ஸ்ரீ பிடாரியம்மன் (ஸ்ரீ செல்லியம்மன்) ஆலயம் உள்ளது. 2008-ல் ஆவணித்திங்களில் இக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த மரத்துறை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு, சுமார் 36 மா நன்செய், புன்செய் நிலங்கள் இருந்தும் போதிய வருமானம் இல்லை. ஆதலால், கோயில்கள் மரத்துறை கிராம மக்களாலும், பக்த கோடிகளாலும், குலதெய்வக்காரர்கள் உதவியாலும், பூசைகளும், விசேஷ காலங்களும் நடந்து கொண்டு வருகின்றன.

PIN code: 609204
STD code: 0435

கும்பகோணம் - RMS.

கட்டுரையாளர் - க. ராமதுரை

SEO tags: marathurai, thanjavur district, thirividaimarudur taluk.


Posted 
Apr 18, 2021
 in 
கிராமங்கள்
 category

More from 

கிராமங்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.