மணவாள நல்லூர் கிராமம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு உள்ளன. தேதியூர் என்னும் கிராமத்தில் சில தெருக்களும் பஞ்சாயத்து அடிப்படையில் இந்த ஊரைச் சேர்ந்தவையாக உள்ளன.
இவ்வூரில். அருள்மிகு மணவாளேசுரர் அருள்மிகு மணவாள சுந்தரி கோவில் உள்ளது. பழைய கோவில். பலகாலம் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்தது; ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி நடைபெற்று இப்போது பூசைகள் நன்றாக நடைபெறுகின்றன. இக்கோவிலுக்கு மிக அருகில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது.
இவ்வூரில் உள்ள ஐயானார் கோவில் இவ்வூருக்கும் தேதியூருக்கும் பொதுவாக உள்ள காவல் தெய்வம். ஊரின் நடுவில் அருள்மிகு வினாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஒட்டி பஜனை மடம் உள்ளது. இந்த மடத்தில் நடராசர் படத்தின் முன், திருமுறைப் பாடல்களும் பஜனையும் நடைபெறுகின்றன.
ஊரில் அரசலாற்றின் குறுக்கே கலுங்கு இருக்கின்றது. இதிலிருந்து பாசன வாய்க்கால்கள் பிரிகின்றன. கலுங்கை ஒட்டி அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. பாரதக் கதைகளும் பாடல்களும் இங்கு படிக்கப்படுகின்றன.
ஊரில் புனித மரியம்மை அரசு உதவிபெறும் நடு நிலைப் பள்ளி உள்ளது. கடைத்தெரு எதுவும் ஊரில் இல்லை. தபால், வங்கி, முதலியவற்றுக்குத் தேதியூர் வரவேண்டும். ஊரின் எல்லையில் பெட்ரோல் நிலையம் உள்ளது.
PIN Code: 609501
STD Code: 04366
Map: வரைபடம் - https://www.google.com/maps/@10.9282786,79.5456751,15z