திப்பிராஜபுரம் கிராமம், கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திற்கு 7 கிமீ தெற்கில் அமைந்துள்ளது. ஊருக்கு வடக்கே திருமலைராஜன் ஆறும் தெற்கில் முடிகொண்டான் ஆறும் பாய்கின்றன.
திப்ப தேவ மகாராயர் என்கிற விஜயநகர பேரரசின் குறுநில மன்னரின் பெயரைத் திப்பிராஜபுரம் தாங்கி நிற்கிறது. இவரே கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர் ஆவார்.
திப்பிராஜபுரத்தில் பூமி நீளா உடனாய வரதராஜ சுவாமி ஆலயம், அபிராமி உடனாய விக்கிரம சோளேசுவரர் ஆலயம், புது மாரியம்மன் கோவில், வரசித்தி விநாயகர் கோவில், அய்யனார் கோவில் முதலிய கோவில்கள் அமைந்துள்ளன.
குடமுழுக்கு விழாவுக்காக 1-மாத வருமானத்தையோ, முதல் மாத வருமானத்தையோ நன் கொடையாக அளிப்பதை இவ்வூர் இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இவ்வூரில் உள்ள வேத பாடசாலையில் 3 வேதங்கள் கற்றுத் தரப்படுகின்றன. கிட்டத்தட்ட100 மாணவர்கள், பாரதத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து வேதம் பயில்கிறார்கள்.
ஆகம பாடசாலையும் இவ்வூரில் சிறப்புடன் நடக்கிறது.
அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
PIN code: 612402
STD code: 0435
விவரங்களை அளித்தவர் - திரு. நா. ஸ்ரீராமன் அவர்கள்