தேதியூர் கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு அரசலாறு வடக்கிலும், திருமலைராஜன் ஆறு தெற்கிலும் ஒடுகின்றன. ஏறத்தாழ 400 குடும்பங்கள் வசிக்கின்றன. ஊரின் தெற்குப்பகுதியில் வயல்கள் அமைந்துள்ளன. பெரியகுளம். மீனாட்சியம்மன் கோவில் குளம், பெருமாள் கோவில் குளம் முதலியவையும், 4 குட்டைகளும் உள்ளன.
ஊரில் உள்ள கோவில்கள்:
1. ஸ்ரீமீனாட்சி - ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில்
2. ஸ்ரீ சுந்தர கனகாம்பிகா - ஸ்ரீ ப்ரத்யக்ஷ பரமேஸ்வரர் கோவில் (பெரிய கோவில்)
3. ஸ்ரீ லோக சுந்தரி - ஸ்ரீ சுதர்சனேஸ்வரர் கோவில் (ஆற்றங்கரைக் கோவில்)
4. ஸ்ரீ பூமி நீலா - ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்
5. ஸ்ரீ வரசித்தி வினாயகர் கோவில் (கீழத்தெரு)
6. ஸ்ரீ மாரியம்மன் கோவில் (தெற்குத்தெரு)
7. ஸ்ரீ வினாயகர் கோவில் (வேளாளர் தெரு)
8. ஸ்ரீ வினாயகர் கோவில் (கம்மாளர் தெரு)
9. ஸ்ரீ செல்லியம்மன் கோவில் (கிராம தேவதை)
10. ஸ்ரீ பூமி நீலா - ஸ்ரீ கருமாணிக்கப் பெருமாள் கோவில்
தேதியூருக்கு அருகே திருவீழிமிழலையும், கருவிலியும் உள்ளன; இவை பாடல் பெற்ற தலங்கள். கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் முதலிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உண்டு. தேதியூர் நற்பணி மன்றம் சமய, சமுதாய மேம்பாட்டு நிகழ்ச்சிகளைச் செவ்வனே நடத்தி வருகிறது.
ஸ்ரீ சங்கரா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி (1936 முதல்), அரசு மேல் நிலைப் பள்ளி இந்த ஊரில் உள்ளன.
சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவெர்சீஸ் வங்கி இவற்றின் கிளைகளும், தபால் தந்தி அலுவலகமும், காவல் நிலையமும் உள்ளன.
PIN Code - 609501
STD Code - 04366