அம்பாள்: வஜ்ரேஸ்வரி
ஊர்: நாகர்காட்
மாவட்டம்: காங்ரா
மாநிலம்: ஹிமாச்சல பிரதேசம்
அம்மனின் 51 சக்திபீடங்களில் இதுவும் ஒன்று. கஜினி முகம்மது இத்திருக்கோயில் மீது 5 முறை படையெடுத்ததாக வரலாறு .1905 ஆம் ஆண்டு பூகம்பத்தால் இக்கோயில் பாதிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி, ராமநவமி, மகர சங்கராந்தி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வஜ்ரேஸ்வரி அம்மனை வஜ்ராபாய், வஜ்ரயோகினி என்றும் மக்கள் அழைக்கின்றனர். அம்மனின் தைரியம் வஜ்ரம் போன்று காணப்படுவதால் வஜ்ரேஸ்வரி என்று பெயர். மஹிஷாசுரனுடன் போரிடும் போது தேவிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால், காயத்திற்கு வெண்ணெய் தடவி அம்பாள் இந்த நாகர்காடில் இருந்தாளாம். அம்பாளுக்கு மகரசங்கராந்தி அன்று வெண்ணெய் அபிஷேகம்.
கலிகாலா/கலிகுட் என்பவன் ரிஷிகள் முனிவர்கள் எல்லோரையும் துன்புறுத்தினான் வசிஷ்ட மாமுனிவரின் தலைமையில் சண்டியாகம் செய்து அம்பாளை அனைவரும் வேண்டினர். இந்த யாகத்துக்கு இந்திரனுக்கு அழைப்பு இல்லை. கோபப்பட்ட இந்திரன் வஜ்ராயுதத்தை யாக குண்டம் மீது எறிந்தான். வஜ்ராயுதம் பல சுக்கல்களாக உடைந்து போனது. அப்போழுது அம்பாள் தோன்றி அந்த வஜ்ராயுதத் துண்டுகளை விழுங்கி, அசுரர்களையும் கொன்றாள். இந்த இடத்திலேயே வஜ்ரேஸ்வரி என்ற திருநாமத்துடன் இருந்து பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலிக்கிறாள்.
மகாபாரத காலத்தில் பாண்டவர்களின் கனவில் துர்காதேவியாகத் தோன்றி தனக்கு ஒரு கோயிலை கட்டித் தருமாறு சொன்னாள் அம்பாள். அதன்படியே இத்திருக்கோயில் கட்டப்பட்டது என்பதும் நம்பிக்கை.