திருப்பார்த்தன் பள்ளி. அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோவில். பார்த்தசாரதி பெருமாள். தாயார் தாமரைநாயகி. தீர்த்தம் கட்கபுஷ்கரணி. பார்த்தன் பள்ளி திருநாங்கூர் என்று அழைக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலே உள்ளது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்யதேசம் ஆகும்.இந்த இடத்திலே ராமர் யாக குண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போலவும், இரு தேவியருடன் காட்சி தருவது போலவும் அதிசயமான ஒரு கோலம் இருந்து வருகிறது.அர்ஜூனனுக்கு என்று ஒரு தனி சன்னதி உண்டு.
கௌரவர்களிடம் நாட்டை இழந்து வனவாசம் சென்றபோது, ஒரு இடத்திலே அர்ஜூனன் தாகத்தினால் தவித்தான். அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து, தியானத்தில் இருப்பதைக் கண்டான். தியானம் முடித்து வரும்வரையில் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால், அகத்தியருடைய தியானத்தைக் கலைத்தான். தனக்குத் தண்ணீர் தருமாறு வேண்டினான். அவரும் அனுமதி கொடுத்தார். கமண்டலத்தைத் திறந்தார். அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை.
அப்போது அகத்தியர், அர்ஜூனா, நீ நம்புகின்ற கிருஷ்ணனிடம் அல்லவா தண்ணீர் கேட்டிருக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது தன்னுடைய தவற்றை உணர்ந்து, கிருஷ்ணா கிருஷ்ணா என்று அர்ஜூனன் சொன்னபோது, கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு ஒரு கத்தியைக் கொடுத்தார். அந்த கத்தியைக் கொண்டு எந்த இடத்தில் கீறினாலும் தண்ணீர் வருமென்று சொன்னார். அர்ஜூனனும் தரையில் கீறி, கங்கையை வரவழைத்து, தாகத்தைத் தீர்த்துக் கொண்டான். அதனால்தான் இந்த இடம் பார்த்தன் பள்ளி என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊரினுடைய PINCODE – 609106.
ஓம் நமோ நாராயணாய.