இறைவர் திருப்பெயர்: சூக்ஷிமபுரீஸ்வரர், மங்களநாதர், சிறுகுடியீசர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களநாயகி, மங்களாம்பிகை.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.
அம்பிகை, பிடியளவு மணலால் பிடித்துவைத்து, மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். "சிறுபிடி" - என்பது மருவி 'சிறுகுடி' என்று ஆனது. மூலவர் - சுயம்பு முர்த்தி. நெற்றியில் பள்ளமும், இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளன. சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. அம்பாளுக்கு மட்டும்தான் அபிஷேகம்.
மங்கள தீர்த்தத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செய்வாய்க் கிழமை நீராடிச் செல்கின்றனர். செவ்வாய் தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகிறது என்பது நம்பிக்கை.
சங்க இலக்கியத்தில் கூறப்படும் 'பண்ணன்' என்னும் கொடை வள்ளல் வாழ்ந்த ஊர்.
சம்பந்தர், கருடன், செவ்வாய், கந்தர்வர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டு இறைவனின் அருள் பெற்றனர்.
முன் மண்டபதில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன்வழியாகத் தேனீக்கள் வந்து போகுமாறு செய்துள்ளார்கள். சிறப்பு மூர்த்தமாகிய "சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி " அருமையான உருவமாகும். அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து, அம்மையை கட்டிக்கொள்ளும் அமைப்பில் தோள்மீது கை போட்டுக்கொண்டு காட்சித் தரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஊரில் இருந்து திருவீழிமிழலை, திருப்பாம்புரம் ஆகிய தலங்கள் சிறிது தூரத்தில் உள்ளன. ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அருளி இருக்கிறார்.
சரபோசிராசபுரம் அஞ்சல்
PIN Code: 609503
STD Code: 04366