பேறை நகர் (பெரும்பேறு கண்டிகை) - தொண்டை நாட்டுத் திருப்புகழ்த்தலம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
இறைவன்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள்
மதுராந்தகத்திலிருந்து 22 கி.மீ தொலைவிலும், அச்சரப்பாக்கத்தி லிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள தலம். (தற்கால வழக்கில் பெரும்பேர்க்கண்டிகை). அழகிய திருத்தலம்.
சென்னை-திருச்சி பிரதான சாலையிலிருந்து இவ்வூருக்குச் செல்லும் பாதையில் காணப்படும் 'தட்சிணா மூர்த்தியின்' பெரிய சிலையினைக் கொண்டே. இத்தலத்தை உறுதி செய்து கொள்ளலாம். சுமார் 200 படிகள் உள்ள மலைக்கோயில், வாகனம் மூலமாகச் செல்ல மலைப்பாதையும் உள்ளது.
மலைக்கோயிலில் முருகனைத் தரிசிக்கு முன்னர் அடிவாரத்தில் சுமார் 1/2 கி.மீ தூரத்தில் உள்ள ஆலயமொன்றில் எழுந்தருளியுள்ள தான்தோன்றி ஈஸ்வர மூர்த்தியைத் தரிசித்தல் மரபு. அகத்தியருக்குச் சிவபெருமான் திருமணக் கோலம் காண்பித்த தலங்களுள் இதுவும் ஒன்று.
அருணகிரி நாதர், பாம்பன் சுவாமிகளின் திருவுருவச் சிலைகள் உள்ளன.
பேறை - திருப்புகழ்