திருப்பழனம். மூலவர் ஆபத்சகாய ஈஸ்வரர். அம்மன் பெரியநாயகி. தலவிருட்சம் கதலி - வாழைமரம், வில்வம். தீர்த்தம் மங்களதீர்த்தம், காவிரி. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டுள்ளது. காவிரியின் வடகரையில் அமைந்த தலங்களில் ஒன்றாகும். சப்தஸ்தானத் தலங்களில் இதுவும் ஒன்று. சப்தஸ்தானத் தலங்களில் இது 2-வது இடம். வயலும், வயல் சார்ந்தும் இருப்பதால் இது திருப்பழனம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
மிகப் பழமையான இராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டுள்ளது. கொடிமரம் காணப்படவில்லை. இந்தக் கோவிலிலே வேணுகோபாலர் சன்னிதி காணப்படுகிறது. கதலி வனம் என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. சந்திரன் வழிபட்ட தலமாகும்.
ஒரு அந்தணச் சிறுவனை எமதர்மன் துரத்திக் கொண்டிருந்தான். அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது, இறைவன் காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால், ஆபத் சகாய ஈஸ்வரர் என்று பெயர்.
இந்தத் தலத்துக்கு வந்த அப்பர், அப்பூதி அடிகளுடைய பெயரை அமைத்து, ஒன்று கொலாம் என்ற பதிகத்தை அருளியிருக்கிறார். திருவையாறு பேருந்து சாலையில், திருவையாறுக்கு அருகிலே இந்தத் தலம் உள்ளது. இந்தத் தலத்தைப் பற்றி 29 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் எல்லாம் முதலாம் பராந்தக சோழன் காலம் முதற்கொண்டே தொடங்குகின்றன.
பலரும் அளித்த நிதிகளும், நிலங்களும், இந்தக் கோவிலுக்கு வந்தவற்றைப் பற்றி இந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன. இராஜ கேசரி வர்மன் என்ற ஒரு வேளாளண், கல்மண்டபம் ஒன்றை எழுப்பித் தந்ததாகக் கல்வெட்டு காணப்படுகிறது.
PINCODE - 613 204.
STD CODE – 04362.