க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோவில். க்ஷீரராமலிங்கேஸ்வரர். அம்மன் மாணிக்காம்பாள். ஊர் பாலக்கொல்லு. கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.
இங்குள்ள லிங்கம் பளிங்குக் கற்களால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் 3 கோடுகள் உள்ளன. அதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்காரம் செய்வார்கள். அம்மனுடைய 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடமாகும்.
கர்ப்பக் கிரகத்திலே கருப்புக் கற்களால் ஆன 27 தூண்கள் உள்ளன. இந்தக் கோவிலிலே உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்தது. கிழக்குக் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. இது 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
திரேதா யுகத்தில் இராம பிரானால் வழிபடப் பட்டதால், இதை ராமலிங்கேஸ்வர சுவாமி என்றும், க்ஷீரராமேஸ்வர சுவாமி என்றும் அழைப்பார்கள். இந்தக் கோவிலிலே ஒருநாள் தங்கி ராமலிங்கேஸ்வரரை வழிபட்டால், காசியிலே ஒருவருடம் தங்கியதற்குச் சமம் என்பது நம்பிக்கை.
தாரகாசுரனை குமாரசுவாமி கொன்ற பிறகு அவனுடைய தொண்டையிலே இருந்த லிங்கத்தை உடைத்தார். அது 5 பகுதிகளாக உடைந்து தெறித்தது. அப்படி விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று.
கௌசிக மகரிஷியினுடைய மகன் உபமன்யு இங்கு சிவவழிபாடு செய்துவந்தான். வழிபாட்டில் பால் அபிஷேகத்திற்கு ஒருநாள் பால் கிடைக்கவில்லை. உடனே உபமன்யு அழ ஆரம்பித்துவிட்டான். சிவபெருமானை வேண்டியவுடன் சிவன் தன் கையால் ஒரு பள்ளத்தைத் தோண்ட அதிலே பாற்கடலில் இருந்து வந்து பால் நிரம்பியது. உபமன்யுவிற்காக ஒரு பாற்கடலையே சிவபெருமான் உண்டாக்கியதாகக் கதையும் உண்டு.
ஆதியிலே இந்த ஊர் இதனால் பாலகோடா என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்போது பாலக்கொல்லு என்று அழைக்கப்படுகிறது.
சிவ சிவ.
More from
தலங்கள்
category
View All
கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர்
4
min read
திருநணா, பவானி - சங்கமேஸ்வரர்
5
min read
ஆக்கூர் தான்தோன்றியப்பர்
4
min read
வைகல் மாடக்கோவில்
2
min read
Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.