அருள்மிகு மங்களநாயகி உடனுறை உமாமகேசுவரர், திருநல்லம்
கோனேரிராசபுரம்
இறைவர்: உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
இறைவியார் தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
தல விருக்ஷம் - அரச மரம்
குளம் - சக்திதீர்த்தம்
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் வடமட்டம் பேருந்துகளில் செல்லலாம். மதுராந்தக தேவனான உத்தமசோழனின் தாயும் கண்டராதித்தன் மனைவியுமான செம்பியன்மாதேவியார் கருங்கற் பணியாகக் கட்டினாள். இங்கே கைலாசமுடைய மகாதேவர், ஆதித்தேசுவரமுடைய மகாதேவர் கோயில்களும் தனித்து இருந்தனவாக கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன.
வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காகச் சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை அருந்திச் சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி அளித்தனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்குத் திருவீதிவுலா கிடையாது. பிரமாண்டமாக நடமாடும் நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மச்சம் ரேகை நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சம்.
உத்தமசோழ விண்ணகரம் என்ற விஷ்ணு ஆலயமும் குறிப்பில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தவை ஆகும்.
இறைவன் (வைத்தியநாதர்) புரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்ததாக வரலாறு. இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன் இராசேந்திரன் முதலாம் இராசாதிராசன் இரண்டாம் இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. பூசைகள் காரணாகம முறைப்படி நடைபெறுகின்றன.
இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தி. ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை உள்ள வில்வமரம் தல விருட்சம். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் ஆகும்.
எமதர்ம ராஜா திருக்கடையூரில் ஏற்பட்ட பயம் நீங்க இந்தத் தலத்தில் துர்கையை வழிபட்டான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர்கள் அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்தனர்; விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.
16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.மூன்று சண்டிகேஸ்வர மூர்த்திகள் உள்ளனர். பூமாதேவி வழிபட்டதால், இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.
PIN - 612201.