கோலாப்பூர் மகாலக்ஷ்மி திருக்கோவில். கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்.

இந்தக் கோவிலினுடைய சிறப்பு என்னவென்றால் ஜனவரி 31-ம் தேதி, நவம்பர் 9-ம் தேதிகளில் கர்பக்கிரகத்தில் சூரியனின் கதிர்கள் மாலை வேளையிலே மகாலக்ஷ்மியினுடைய பாதத்தில் விழும். பிப்ரவரி 1, நவம்பர் 10 தேதிகளில் சூரியனுடைய கதிர்கள் மகாலக்ஷ்மியினுடைய மார்புப் பகுதியிலே விழும். பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் சூரியக்கதிர் மகாலக்ஷிமியின் உடல்பகுதி முழுவதும் விழும்.  அவ்வளவு சிறப்புடன் இதனுடைய கர்பக்கிரகமும், விக்ரஹமும் அமைக்கப்பட்டுள்ளன.

இது சக்திப்பீடங்களில் ஒன்றான கரவீரபீடம் என்று அழைக்கப்படுகிறது. அன்னையினுடைய கோவிலைச் சுற்றி 50 சிறு கோவில்களும், இந்த ஊர் முழுவதும் 3000 கோவில்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது மராத்தியப் பாணியில் கட்டப்பட்ட கோவிலாகும். தேவி, கோலாசுரன் என்ற அரக்கனை சிம்மவாகனத்தில் எழுந்தருளி அழித்தார். இங்கு அன்னையினுடைய சிற்பம் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் பாம்பு குடை பிடிக்கின்றது. அன்னையின் கையிலே அமுதசுரபியை ஏந்தி இருக்கின்றார்.

பிரளய காலத்திலே எல்லா இடத்திலும் நீர் பொங்கியபோது, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியினுடைய கரங்களின் வீரத்தினால், உயர்த்திப் பிடிக்கப்பட்டது. கர என்றால் கை, வீர் என்றால் வீரம்.

ஓம் சக்தி.

Posted 
May 16, 2022
 in 
தலங்கள்
 category

More from 

தலங்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.