திருக்காட்டுப்பள்ளி. ஆரண்யேஸ்வரர். அம்மன் அகிலாண்டேஸ்வரி. தலவிருட்சம் பன்னீர் மரம். அமிர்த தீர்த்தம். கீழைத் திருக்காட்டுப்பள்ளி என்று சொல்வார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலம். இந்தத் தலத்தினுடைய மூர்த்தி சுயம்புமூர்த்தி.
பிரகாரத்தில் தசலிங்கம் சன்னதி இருக்கின்றது. ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பதும் இந்த ஊரினுடைய சிறப்பாகும். இந்த ஊரினுடைய PINCODE – 609114. மூலவருடைய மேலே உள்ள விமானம் த்வைதளம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்திலிருந்து திருவெண்காடு மிக அருகில் உள்ளது.
இந்தத் தலத்திலே 6 சீடர்களுடன் தக்ஷிணாமூர்த்தி இருக்கின்றார். வனத்தின் மத்தியிலே இருப்பதால் ஆரண்யேஸ்வரர். காட்டழகர் என்றும் அழைக்கப்படுகிறார்.4 சீடர்களுக்கு பதிலாக 6 சீடர்களுடன் தக்ஷிணாமூர்த்தி, இராஜயோக தக்ஷிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
இதேபோல் இந்தத் தலத்திலே விநாயகரும் விஷேசம். நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு இந்தத் தலத்திலே மூஷிக வாகனம் இல்லாமல், அவருடைய பீடத்திற்கு கீழே நண்டு இருப்பதும் வித்தியாசமான அம்சமாகும்.
ஆரண்ய முனிவர் வழிபட்டதால், ஆரண்யேஸ்வரர் என்ற புராணக்கதையும் உண்டு.
பிரம்மாவிடம் விருத்தாஸ்வரன் ஒரு வரம் பெற்றிருந்தான். தேவர்களைத் துன்புறுத்தினான். அவனை இந்திரன் அழித்தபோது, இந்திரனுக்கு ஒரு தோஷம் வந்தது. தேவலோகப் பதவியும் அவனை விட்டுப் போய்விட்டது. அதற்காக குருவிடம் ஆலோசனை கேட்டு, இந்தத் தலத்திலே வந்து, வனத்தின் மத்தியிலே இருந்த தக்ஷிணாமூர்த்திக்கு சிவபூஜை செய்து வழிபட்டான்.
அப்போது சிவன் காட்சி தந்து, ஞாயத்திற்காகச் செய்யும் செயல் எத்தகையதாக இருந்தாலும், அதற்குப் பாவம் கிடையாது என்று சொல்லி அருள்புரிந்தார்.
ஓம் நமச்சிவாய.