சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். காங்கேயநல்லூர். மூலவர் சுப்பிரமணியர். உற்சவர் சண்முகர். தீர்த்தம் சரவணப் பொய்கை. சிவாகமப்படி பூஜை நடைபெறுகிறது. இது வேலூர் மாவட்டத்திலே அமைந்திருக்கின்றது. அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். வைகாசி விசாகம், மாசிமாச பிரமோற்சவம் , தைப்பூசம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.
இங்கு மூலவருடைய பெயர் காங்கேயர். வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
சன்னிதியினுடைய முன் மண்டபத்திலே அருணகிரிநாதருக்குத் தனி வாசலும், துவாரபாலகர்களும் இருப்பது இங்கு இருக்கக்கூடிய வித்தியாசமான அமைப்பாகும். அருணகிரியாரைத் தரிசனம் செய்த பிறகே, பக்தர்கள் முருகனைத் தரிசிக்க முடியும். விநாயகர், சுந்தர விநாயகர் எனப்படுகிறார்.
முருக பக்தரான வாரியார் சுவாமிகளுடைய தந்தை மலையதாசர் இந்தக் கோவிலுக்கு கோபுரம் கட்ட எண்ணினார். திருவண்ணாமலை சென்றார். திருப்புகழ் சுவாமி என்று அழைக்கப்பட்ட லோகநாத சுவாமியை சந்தித்தார். ஆனால் அவரோ அடுத்த வருடம் வா என்று சொல்லிவிட்டார். மறுவருடமும் சென்றார். மலையதாசர் சென்றபோது, திருப்புகழ் சுவாமிகள் விபூதியும், 1 ரூபாயும் கொடுத்துத் திருப்பணியை ஆரம்பிக்கும்படி சொன்னார். அப்படியே மலையதாசரும் தொடங்க, கோபுரம் விரைவில் கட்டப்பட்டது.
இந்தக் கோவிலுக்கு எதிரிலே வாரியார் சுவாமிகளுடைய அதிஷ்டானமும் இருக்கின்றது.
சித்திரைப் பிறப்பின்போது, முருகன் வடக்குக் கோபுரத்தின் கீழ் எழுந்தருளிக் காட்சி தருகிறார். குபேர திசை என்பதால், அன்று தரிசனம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும் என்று பக்தர்களுடைய நம்பிக்கை.
அருணகிரிநாதர் இந்த ஸ்தலத்திற்கு வந்தபோது, சுவாமிக்குத் தயிர்சாதம் நிவேதனம் செய்தார். அப்போது 6 அடியார்கள் அங்கு வந்து, அந்தப் பிரசாதத்தை ஏற்றார்கள். முருகப்பெருமானே 6 அடியார்களாக வந்ததாக ஐதீகம்.
PINCODE - 632516.
முருகா சரணம்.