தேவிபட்டினம், ராமநாதபுரம் மாவட்டம். உலகநாயகி, மகிஷாசுர மர்த்தினி அம்மன். தீர்த்தம், சக்கரை தீர்த்தம். புராணப்பெயர் தேவிபுரம் அல்லது தேவிப்பூர். இது 51 சக்தி பீடங்களில் வீரசக்தி பீடமாகும். இது கடற்கரை ஓரத்தில் அமைதியான சூழலிலே கிழக்கு நோக்கிய  கோவில் ஆகும்.

இங்கு அமைந்துள்ள விமானம் ஏகதள விமானம் ஆகும்.  இருபுறமும் சிங்கங்கள் இருக்க அம்மன் அமர்ந்த கோலத்தில் சுதைசிற்பம் உள்ளது.  வீரம் வருவதற்காகப் பிராத்தனைகள் நடைபெறுகின்றன.  

தேவிபட்டினம் என்றாலே ராமர் தன்னுடைய தோஷ நிவர்த்திக்காகக் கடலுக்குள்ளே  பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவகிரகம் தான்  நினைவுக்கு வரும். ஆனால் இலங்கை செல்வதற்கு முன்பு உலக நாயகி அம்மனை ராமர் வழிப்பட்டார் என்பது  நம்பிக்கை.

இந்த உலகைக் காப்பதற்கு, எருமைத் தலையுடைய மகிஷாசுரனுடன் ஒன்பது நாள் போராடி பத்தாம் நாள் வெற்றி பெற்ற அம்பாள், சயன கோலத்திலே சுயம்புவாக உலக நாயகி என்ற பட்டத்துடன் இங்கே காட்சி தருகிறார்.

ஆனால் இங்கு அம்மனுக்கு உருவம்  ஏதும் கிடையாது.  சக்தி பீடங்களிலே காஞ்சி காமாட்சிக்குக் காமகோடி பீடம் என்றும் காசி விசாலாட்சிக்கு மணிகர்ணிகா பீடம் என்பது போல் தேவிபட்டினத்தை வீர சக்தி பீடம் என்று சொல்கிறோம்.

மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் செய்த பொழுது விஷ்ணு, சிவன், பிரம்மா, இந்திரன், அக்னி, வருணன், வாயு, ஐராவதம், எமன், குபேரேன், சூரியன் ஆதிஷேசன் எல்லோரும் ஆயுதங்களை அம்பாளுக்கு அளித்தார்கள். அம்பாளுக்கு ஹிமவான் சிம்ம வாகனமாக ஆனான்.

சர்வசக்தி பொருந்திய இந்த தேவி பதினெட்டு கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி, சிம்மவாகனத்தில் சென்று மகிஷாசுரனை வதம் செய்து, ஒய்வு எடுத்த நிலையிலே இங்கு இருக்கின்றாள்.  இந்த வீர சக்தி பீடத்தைத் தொழுதால் அனைவருக்கும் மனோதைரியம் வருவது நிச்சயம்.

PINCODE -  623514.

STDCODE – 04567.

ஓம் சக்தி.

Posted 
Mar 2, 2022
 in 
தலங்கள்
 category

More from 

தலங்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.