அருள்மிகு சுந்தரநாயகி - அருள்மிகு பாக்கபுரேசுரர்
மரம்: கொன்றை
குளம்: வேததீர்த்தம்
இது தொண்டை நாட்டுத்தலம் ஆகும். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை - சென்னை இரயில் பாதையில், திண்டிவனம் - செங்கல்பட்டு சாலை வழியில் உள்ளது. இப்போது அச்சரப்பாக்கம் என்று அழைக்கப் படுகிறது. ஊருக்கு அருகில் ஒரு மலை இருக்கிறது.
திரிபுரத்தை எரிக்கக் கிளம்பிய சிவபெருமான், தேவர்கள் அமைத்த தேரில் எழுந்தருளினார்; தேவர்கள் விநாயகரை வணங்க மறந்து விட்டனர். தேரின் அச்சு முரிந்தது தேர் அச்சு இற்ற (முரிந்த) காரணத்தால் இப்பெயர் வந்தது. பாண்டியன் ஒருவன் கங்கை மணலை வண்டியிலே ஏற்றிக் கொண்டு வரும்போது, இங்கே வந்த போது, வண்டி நகரவில்லை; அதைச் செலுத்த முயன்றபோது அச்சு முரிந்தது. அப்போது ஒரு அசரீரி கேட்டது. இத்தலத்தின் புராணம் அறிந்து அவன் ஆலயத் திருப்பணியைச் செய்ததாக வரலாறு. கண்வ மகரிஷி, கௌதம மகரிஷி ஆகியோர் இவ்விறைவனைப் பூசித்துப் பேறு பெற்றார்கள்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
PIN Code: 603301
STD Code: