அருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில்
கோடம்பாக்கம், சென்னை மாவட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியில் இக்கோயிலுள்ளது. ஒரு இஸ்லாமியப் பெண்மணி தன் மகனுக்குப் பார்வை கிடைப்பதற்காக அம்மனிடம் வேண்டிக்கொண்டாள். அம்மன் குழந்தைக்குப் பார்வை தந்து அருளினாள். அதனால் அம்மனின் திருநாமம் ஆதி துலுக்காணத்தம்மன் என்பது தல வரலாறு.
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்த ஓர் ஓடையில் இருந்து ஒருநாள் அம்மனின் சிரசு (தலை) மட்டும் கண்டெடுக்கப்பட்டது. முதலில் அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைகளைக் கொண்டு கட்டப்பட்ட கோயில்,பிறகு அனைவரின் முயற்சியாலும் இந்தக் கோயில் கட்டடமாக எழுப்பப்பட்டது.
இங்குள்ள அம்மன் கடும் உக்கிரத்துடன் (கோபத்துடன்) சிரசு மட்டுமே கொண்ட ஆதி தலுக்காணத்தம்மன் ஆவாள். பின்னாளில் அம்மனின் முழுவிக்கிரகத் திருமேனி செய்யப்பட்டது. சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு பூஜை, ஐயப்ப பஜனை என எப்போதும் விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசையில் அம்மனுக்குப் பொங்கல் வைத்தும் கூழ்வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.